மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

கட்சியை அபகரிக்கப் பார்க்கிறார்கள்!

கட்சியை அபகரிக்கப் பார்க்கிறார்கள்!

கொல்லைப்புறத்தின் வழியாக வந்து, இந்தக் கட்சியை அபகரிக்கப் பார்க்கிறார்கள். இந்த ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று தினகரன் தரப்பினர்மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த நாள், நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (டிசம்பர் 30) உதகமண்டலத்தில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தேர்தல், ஒரு வித்தியாசமான தேர்தல். உலகத்தில் இருக்கின்ற எந்தவொரு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வராத எண்ணம்கொண்ட ஒரு வித்தியாசமான தேர்தல்தான் இந்த ஆர்.கே.நகர் தேர்தல். ஆகவே, இதற்கு முன்பு திருமங்கலம் ஃபார்முலா என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதை மிஞ்சி, இப்போது ஆர்.கே.நகர் ஃபார்முலா என்ற ஒரு ஃபார்முலாவைக் கண்டுபிடித்து தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த ஃபார்முலா ஹவாலா ஃபார்முலா. இதுவரைக்கும் யாரும் சிந்தித்ததுகூடக் கிடையாது. எவ்வளவோ அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். எவ்வளவோ சிந்தனையாளர்கள் இருக்கின்றார்கள். எவருடைய எண்ணத்துக்கும் எட்டாதது ஒரு நபருக்கு எட்டியது என்று சொன்னால், அவர் எப்படிப்பட்ட கிரிமினலாக இருப்பார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஹவாலா ஃபார்முலா மூலம் வெற்றி பெற்று, எங்களைத் துரோகி என்று சொல்கின்றார். யார் துரோகி என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். ஆக, இப்படிப்பட்ட பார்முலாவைக் கொண்டுவந்தவர்தான் துரோகி என்பதை இந்த நேரத்திலே கோடிட்டுகாட்ட விழைகின்றேன்.

மக்களை நேரடியாகச் சந்தித்து, அதன் மூலமாக தினகரன் வெற்றி பெறவில்லை. இந்த நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் தெரியும். ஆகவே, துரோகிகள் நாங்கள் அல்ல, நாங்கள் அத்தனை பேரும் உழைத்தவர்கள், உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். மக்களால் போற்றப்படுகின்றவர்கள். துரோகி என்பது யார்? அவர்கள்தான்.

கொல்லைப்புறத்தின் வழியாக வந்து, இந்தக் கட்சியை அபகரிக்கப் பார்க்கிறார்கள். இந்த ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தக்க பாடத்தை மக்களும் அதிமுக தொண்டர்களும் புகட்டுவார்கள்.

இந்த ஆட்சியையும், கட்சியையும் அழிக்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர். அவரோடு துணைபோய்க் கொண்டிருக்கின்றார் இந்த டி.டி.வி.தினகரன். இருவரும் கூட்டு சேர்ந்துதான் நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டார்கள். கதை என்னவானது. எங்களை வீழ்த்த வேண்டுமென்று நினைத்தார்கள். அவர்களை மக்கள் வீழ்த்திவிட்டார்கள். பத்து கட்சி ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்தும்கூட பெற்ற ஓட்டு சொற்ப ஓட்டு, டெபாசிட்கூட பெற முடியவில்லை.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017