மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

பியூட்டி ப்ரியா - கொண்டை: அழகின் கூட்டணி!

பியூட்டி ப்ரியா - கொண்டை: அழகின் கூட்டணி!

நீளமான முடி கொண்டவர்கள் எப்படியெல்லாம் அதை பராமரிப்பது என கவனம் கொள்கிறார்களே தவிர, எப்படியெல்லாம் சிற்சில மாற்றங்களைச் செய்தால் மேலும் அழகுற இருக்கலாம் என்பதை கவனிக்க தவறுகிறார்கள்.

நீண்ட கூந்தலை உடையவர்களுக்குப் பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக அமையும்.

முடியை தூக்கிவாரி கொண்டையின் மேல் பிரெஞ்ச் நாட் போடலாம். கழுத்துக் குட்டையாக இருப்பவர்கள் போட்டாலும் அழகுதான்.

நீளக்கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.

மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழுத்தை ஒட்டி வகிடெடுத்து சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.

உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம். ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளவும்.

குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கிக் கொண்டை போடுங்கள்.

எல்லோருமே கொண்டை வலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை (ஓவராக அல்ல) ஒட்டி வைத்துக்கொண்டால் விசேஷங்களுக்குச் செல்லும்போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டும் கிடைக்கும்.

மிக நீண்ட கழுத்து உள்ளவர்கள் கழுத்தை ஒட்டினார்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.

உருண்டை முகம் கொண்டவர்கள் உயரமான கொண்டை போட்டால் மிகவும் அழகாக இருக்கும்.

ஓவல் முகம் கொண்டவர்கள் காதை மூடின மாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக்கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.

சதுர முகம் கொண்டவர்கள் தளர (காதை மூடிய பின்னல்), கொண்டை போடலாம். காதோர முடியைச் சுருட்டி தொங்கவிட மேலும் அழகாக இருக்கும். குண்டானவர்கள் கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017