மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

சிறப்புக் கட்டுரை: எப்போதும், நல்ல எனர்ஜியுடன் இருப்பது எப்படி?

சிறப்புக் கட்டுரை: எப்போதும், நல்ல எனர்ஜியுடன் இருப்பது எப்படி?

சத்குரு

கேள்வி:காலையில் வேலை ஆரம்பிக்கும்போது நன்றாகத்தான் உள்ளது. ஆனால், மாலை ஆக ஆக சோர்வாகிவிடுகிறது. ஒருநாள் முழுக்க நல்ல சக்தியுடன், சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லையே. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

சத்குரு: நாம் உயிருடன் இருப்பதே சக்தியினால்தான். இந்தச் சக்தி தன்னை பலவிதங்களிலும் வெளிப்படுத்திக்கொள்கிறது. அதனுடன் நீங்கள் எத்தனை லாகவமாக விளையாடுகிறீர்கள் என்பதுதான் நீங்கள் எவ்வளவு சக்தியுடன் இருப்பீர்கள் என்பதை நிர்ணயிக்கும். நீங்கள் உணவு உண்ணக் காரணம், சக்தியுடன் இருப்பதற்காகத்தான். பெட்ரோல் கார் வாங்கிவிட்டு, அதற்கு கெரோசினை ஊற்றினால் வண்டி ஓடும். ஆனால், அதன் முழு திறனுக்கு ஓடாது. பல இடங்களில் நிற்கும். தேவைக்கு அதிகமான பராமரிப்பு வேண்டியிருக்கும். நான் தற்போது பேசிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய நாடித்துடிப்பு சராசரியாக 45லிருந்து 48 வரை இருக்கிறது. நான் அமைதியாக அமர்ந்தால், 40க்கு கீழ் சென்றுவிடும். உணவு உண்டபின், 55லிருந்து 60 வரை இருக்கும். தற்சமயம், நீங்கள் உங்களுடைய நாடித்துடிப்பை சரி பாருங்கள். நிச்சயமாக 80ஐ சுற்றி இருக்கும். எதுவும் செய்யாத போதும் உங்கள் வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறதல்லவா? இப்படியிருந்தால், உங்கள் எரிவாயு டேங்க் சீக்கிரமே காலியாகிவிடும். சக்தியைக் குறைவாக பயன்படுத்தும்போது, அதிகமாக சேகரிப்பு இருக்கும். எனக்கும், என்னுடன் வாழும் பலருக்கும் வாரத்தில் ஏழு நாள்களும் இடைவிடாத வேலை. தூக்க நேரம் 4 மணி நேரத்துக்கும் குறைவு. நன்றாகத்தானே இருக்கிறோம். என்னைப் பார்த்தால் தூக்கத்தைத் தொலைத்தவனைப் போல் உள்ளதா என்ன? என் வேலையையே நான் விடுமுறையாகப் பார்க்கிறேன். இப்படி வாழும்போது, விடுப்பு தேவையில்லை, விடுமுறை தேவையில்லை. தேவையில்லாமல், ஏதோவொரு விதத்தில் உங்கள் சக்தியை விரயமாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். வண்டியை ஓட்டும் டிரைவரை பொருத்துதானே எரிவாயு விரயம் இருக்கும்? வாகனம் எப்படி ஓட்டப்படுகிறது, அதற்குள் எம்மாதிரியான எரிவாயு இடப்படுகிறது, அதனை எவ்வாறு தூய்மைப்படுத்துகிறீர்கள், அதை எப்படி கையாளுகிறீர்கள் போன்ற பல விஷயங்கள் ஒரு வாகனத்தின் வல்லமையை நிர்ணயிக்கின்றன. இது மனிதனுக்கும் பொருந்தும். பல ஆயிரம் வருடங்களாக, இந்த தேசத்தில் மட்டும்தான், மனிதன் தன் உள்நிலையை எப்படி வைத்துக்கொள்வது என்பதற்கு ஓர் அறிவியலே வகுத்திருக்கிறார்கள். அந்த அறிவையும் ஞானத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தத் தலைமுறையில் அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எதை எதையோ பொறுக்கி எடுத்துக் கொள்கிறார்கள். நீங்களும் நானும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருந்தால்தான் சமூகமும் வளமாய் இருக்கும். சமூகம் என்பது ஒரு வார்த்தை மட்டுமே. நாம் துன்பமாய் இருந்துவிட்டு சமூகம் நலமாய் இருக்க வேண்டும் என முனைந்தால் அது நடக்காது. ஒன்றாய் கூடிக் களித்து, குடித்து, நடனமாடி வாழ்வதனால் மட்டும் நன்மை வந்துவிடாது. மனித நன்மைக்கு, உகந்த செயல்களையும் அதற்கு உண்டான அடிப்படை கலாசாரத்தையும் காப்பது அவசியம்.

கேள்வி: சத்குரு, நான் தொடர்ந்து ஈஷா யோகா பயிற்சிகள் செய்து வருகிறேன். ஆனால்... எனக்கு உங்கள் மேல் சந்தேகமாக உள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை? பயிற்சியை விட்டு விடட்டுமா?

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017