மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

பாலியல் வன்கொடுமை: 51 சிறுமிகள் மீட்பு!

பாலியல் வன்கொடுமை: 51 சிறுமிகள் மீட்பு!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான 51 சிறுமிகளை போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவைச் சேர்ந்த யாசினிகஞ்ச் பகுதியில் இஸ்லாமிய சிறுமிகள் தங்கி படிக்கும் பிரபல மதரசா (கல்வி பயிற்றுவிக்கும் இடம்) ஒன்று உள்ளது. இங்கு சுமார் 100 சிறுமிகள் தங்கியுள்ளனர். இவர்களில் பலர், அக்கல்வி நிறுவனத்தின் மேலாளரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) நள்ளிரவு வேளையில் அந்த மதரசாவில் சாதத்கஞ்ச் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து 51 சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பாக போலீஸார், மதரசாவின் மேலாளர் முகமது தய்யப் ஜியா கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சாதத்கஞ்ச் போலீஸார் ஒருவர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “மதரசாவில் பாலியல் கொடுமைகள் நடப்பதாகக் கிடைத்த தகவலின்படி, சோதனை நடத்தப்பட்டதில் 51 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அந்நிறுவனத்தின் மேலாளரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறோம். மீட்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்களுக்குத் தகவல் அனுப்பியுள்ளோம். இந்த மதரசா அரசிடம் பதிவு செய்யப்பட்டது போல் முறையாக இயங்குகிறதா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். இதில் 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சோதனையின் போது 51 சிறுமிகள் மட்டுமே இருந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017