மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ஆர்.கே.சுரேஷ் திருமணம் ரத்து?

ஆர்.கே.சுரேஷ் திருமணம் ரத்து?

ஆர்.கே.சுரேஷ், திவ்யா இருவருக்கும் நடக்கவிருந்த திருமணம் நின்று விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தாரைதப்பட்டை, மருது ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சுரேஷ், சென்னையின் வடபழனியில் உள்ள சிகரம் ஹாலில், தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடச் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆர்.கே.சுரேஷின் அலுவலகத்தில் தலைமை செயல் அலுவலராக வேலை பார்த்தும் வந்தவரும் சுமங்கலி எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்தவருமான திவ்யாவை தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அவர் அறிவித்தார்.

மேலும், இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறிய அவர், திவ்யாவை மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களால் சுரேஷ் - திவ்யாவுக்கு இடையே நடக்க இருந்த திருமணம் நின்றுவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதை ஆர்.கே.சுரேஷ் தரப்பு மறுத்துள்ளது. ஜாதக பிரச்னை காரணமாகத் திருமணம் வேறு தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், இது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017