மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

ரயிலில் படியில் பயணிக்கும் மாணவர்கள்மீது நடவடிக்கை!

ரயிலில் படியில் பயணிக்கும் மாணவர்கள்மீது நடவடிக்கை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்தால், அவர்களின் கல்லூரி முதல்வர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படையினர், படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் மாணவர்களின் ஆதாரங்களை அம்மாணவர்கள் பயிலும் கல்லூரியின் முதல்வருக்கு அனுப்புவார்கள். இது மாணவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதில், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மாணவர்களின் இந்தச் செயலுக்கு முடிவு கட்டும் வகையில் ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், அந்தச் செயல் தொடர்ந்து நடைபெற்றுத்தான் இருக்கின்றது. இதற்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் புதிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதாவது, படியில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களைப் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு, அவர்கள் ரயில்வே பாஸ் பெறும்போது, அந்த போட்டோவுடன், இந்த போட்டோவை வைத்து கணினியில் தேடி பார்க்கும்போது, குறிப்பிட்ட மாணவனைப் பற்றிய முழு விவரமும் தெரிந்துவிடும்.

இதை ஆதாரமாகக்கொண்டு அம்மாணவர்கள் பயிலும் கல்லுரி முதல்வருக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த பாதுகாப்பு அலுவலர் லூயிஸ் அமுதன் கூறினார்.

2016ஆம் ஆண்டில் படியில் தொங்கியபடி சென்று விபத்து ஏற்பட்டதாக 6,500 வழக்குகளும், இந்தாண்டில், 7,500 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 15% அதிகரித்துள்ளது. அதாவது, டிசம்பரில் 8,300 ஆக உயர்ந்துள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017