மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

கிச்சன் கீர்த்தனா - வடை சுவையாக இருக்க சில டிப்ஸ்!

கிச்சன் கீர்த்தனா - வடை சுவையாக இருக்க சில டிப்ஸ்!

‘அட’ எனும் அளவுக்கு ‘வடை’ சுவையாக இருக்க இதோ சில டிப்ஸ்:

இரண்டு தேக்கரண்டி உளுத்தம்பருப்பைத் தனியாக ஊறவைத்துக் கொள்ளவும். இது அரைத்த மாவில் கலப்பதற்கு. இவை மாவு ஒன்றாக ஒட்டாமல் விலகி இருக்க உதவிடும்.

ஊறிய பருப்பை மைய அரைக்காமல் கொஞ்சம் சொரசொரப்பாக அரைக்கவும். இவ்வாறு அரைப்பதால் வடை ஒரே சீராக வேகும்.

அதில் உப்பையும் ஒரு சிட்டிகை சமையல் சோடாவையும் போட்டு நன்கு கலக்கவும். சோடா, உப்பு போடுவதால் வடை ஆறினாலும் கெட்டியாகாமல் மெதுவாக இருக்கும்.

பிறகு கலக்கிய மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் தனியாக ஊறவைத்துள்ள பருப்பையும் சேர்த்துக் கலக்கவும்.

கலக்கிய மாவை உள்ளங்கையில் தண்ணீரைத் தடவி தேவையான மாவை உருண்டையாக உருட்டிவைத்து வடைகளாகத் தட்டி அதன் நடுவில் துளையிட்டு தயாராக இருக்கும் சூடான எண்ணெயில் மெதுவாக போட்டவும்.

அரைத்து வைத்துள்ள பருப்புடன் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்தால் வடை மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும்.

அதே போல் வடைகளைப் பொரிக்கும்போது ஒவ்வொரு முறையும் ஒரே நேரத்தில் போட்டு ஒரே நேரத்தில் எடுக்க வேண்டும். இல்லையென்றால் எண்ணெயின் சூடு மாறுபட்டு வடை மொறுமொறுப்பு தன்மையை இழந்து கெட்டியாகிவிடும்.

மாவுக் கலவை அதிக நேரம் ஊறாமல் இருப்பது நல்லது இல்லையென்றால் வெங்காயத்திலிருக்கும் நீர் கசிய ஆரம்பித்து வடையின் சுவையை மாற்றிவிடும். ஆகவே, அகலமான சட்டியில் வடையின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டால் வேகமாக சுட்டெடுக்கலாம்.

உளுந்து வடைக்கு அரைக்கும்போது அவல் ஒரு கப் 10 நிமிடங்கள் ஊற வைத்து அரைத்து முடிக்கும் நேரத்தில் சிறிது அரைத்து எடுத்து வடை செய்தால் உள்ளே நல்ல வெண்மை நிறத்திலும், வெளியே தங்க நிறத்திலும் மொறு மொறுவென்று வடை சூப்பராக இருக்கும்.

நாளை புத்தாண்டுக்கு எப்படியும் வீட்டில் வடை பாயசம் என்று ஏக விருந்துக்கு ஏற்றதாக இது அமையும். அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கீர்த்தனா சிந்தனைகள்:

Saree கேட்டுட்டே இருக்குறவ பொண்டாட்டி, Sorry கேட்டுட்டே இருக்குறவன் புருஷன்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017