மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 டிச 2017

தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் மறைவு!

தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் மறைவு!

தமிழ், இந்தி, ஆங்கில படங்களை தயாரித்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் காலமானார். அவருக்கு வயது 60.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் ஜீன்ஸ், மின்னலே, தாம்தூம், கோச்சடையான் ஆகிய திரைப்படங்களில் தனது உறவுக்கார பெண்ணான சர்மிளாவுடன் சேர்ந்து பல படங்களில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார். இந்தியில் மாதவன் நடித்த ராம்ஜி லண்டன் வாலே படத்தின் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்லாது இங்கிருந்து ஹாலிவுட் சென்றவர் அங்கே இந்தியன் சம்மர், டிரோபிகல் ஹெட், இன்ஃபெர்னோ, ஜங்கிள் பாய் போன்ற பல ஹாலிவுட் படங்களைத் தயாரித்துள்ளார். இதில் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்த ஆங்கில படமான பிளட் ஸ்டோன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த ஹாலிவுட் படமான ப்ரொவோக்டு ஆகிய வெற்றிப்படங்ளையும் இவரே தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரின் மறைவு குறித்து உறவுக்கார பெண்ணான சர்மிளா டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

“இது எங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது திரைப்பட துறை சார்ந்தவர்களுக்கும் மிகப் பெரிய இழப்பு. அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்ததால் ரொம்பவும் வருத்தமடைந்தேன்; அதிர்ச்சியடைந்தேன். எனக்கு மிகவும் நெருக்கமானவராக அவர் இருந்தார். பெரிய பெயர்களுடன் அமையும் படங்களில் பணிபுரிந்தாலும், சூப்பர் ஹிட்ஸ் படங்களைத் தயாரித்தாலும் எனக்கு உறுதுணையாக பல படங்களுக்குத் தானாக முன்வந்து உதவியவர் சுனந்தா” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பெங்களூரு, மும்பை, சென்னை, லண்டன் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் அவர், நல்ல உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தில்லை. இதனால் அவருக்கு புற்று நோய் ஏற்பட்டது. கடந்த ஆறு மாத காலமாக இந்த நோயால் அவதிப்பட்டவர் நேற்று (டிசம்பர் 30) காலமானார்" என்றும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

சுனந்தாவின் மறைவுக்கு பல்வேறு திரைப் பிரபலங்கள் தங்களது வருத்ததை தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற இருக்கிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 31 டிச 2017