மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

விரைவில் டிஜிபிகள் மாநாடு!

விரைவில் டிஜிபிகள் மாநாடு!

குவாலியரில் நடைபெறவுள்ள 52ஆவது அனைத்து மாநிலக் காவல் துறைத் தலைவர்களின் வருடாந்தர மாநாட்டில் கலப்புத் திருமணம், தீவிரவாதம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து மாநிலக் காவல் துறைத் தலைவர்களின் வருடாந்தர மாநாடு டிசம்பர் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி மும்முரமாக இருந்ததால் டிசம்பரில் மாநாடு நடைபெறாமல் தள்ளிப்போனது. அதன்படி, 2018 ஜனவரி 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள தெகன்பூரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த டிஜிபி மற்றும் ஐஜி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 250க்கும் மேற்பட்ட மூத்த காவல்துறை அதிகாரிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மாநிலங்களுக்கான உள்துறை அமைச்சர்கள் பங்கெடுக்கவுள்ளனர். பொதுவாக இந்த மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெறுவதுதான் வழக்கம். ஆனால் மோடி பிரதமராக பதவியேற்றபின் கவுஹாத்தி, குஜராத் , ஐதராபாத் தற்போது குவாலியர் என்று பிற இடங்களிலேயே நடத்தப்பட்டுவருகிறது.

சட்ட விரோதமாகக் குடியேறுபவர்கள், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், மதம் மாறித் திருமணம் செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது. கேரளப் பெண் ஹாதியாவின் திருமணம் தொடர்பாக விசாரணை நடத்திய தேசியப் புலனாய்வு அமைப்பு, இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அதிகரித்துவருவதாகக் குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாகவே கலப்புத் திருமணங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017