மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

தேர்தல் தோல்வி: நிர்வாகிகள் மீது நடவடிக்கை!

தேர்தல் தோல்வி: நிர்வாகிகள் மீது நடவடிக்கை!

திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியையடுத்து தேர்தல் பணியாற்றத் தவறிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி திமுகவுக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது. ஸ்டாலின் செயல் தலைவராக சந்தித்த முதல் தேர்தலிலேயே கட்சி தோல்வியை தழுவியது திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகரில் திமுக நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க அக்கட்சியின் சட்டப்பேரவை கொறடா அர.சக்கரபாணி, திமுக சட்டப்பிரிவு செயலாளர் இரா.கிரிராஜன், சட்டப்பிரிவு துணைச் செயலாளர் வீ.கண்ணதாசன் ஆகியோரைக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் 2-ஆவது நாளாக ஆர்.கே.நகரில் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இக்குழு வரும் 31-ம் தேதி அறிக்கை அளிக்க உள்ளனர்.

இதற்கிடையே, ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும்வரை எந்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறாது என்று மு.க. அழகிரி சமீபத்தில் கூறியிருந்தார். பிற கட்சியில் இருந்து வருபவர்களுக்கே பதவி வழங்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது கட்சியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி,ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் உட்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில், 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

தீர்மானம் 1: 2ஜி என்ற மாயாவி காற்றில் கரைந்த கற்பனை கணக்கு

தீர்மானம் 2: இடைத்தேர்தலில் பணமழைக்கு இடையேயும் தேர்தல் ஜனநாயகத்தை திமுக போற்றியது

தீர்மானம் 3: ஆர்.கே.நகர் தேர்தல் பணியில் ஈடுபடத் தவறிய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது.

தீர்மானம் 4: ஓகி புயல் பாதிப்புக்கு ரூ.13520 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017