மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

கட்சிக்காரனே மதிக்கலைன்னா எப்படி ஜி? -அப்டேட் குமாரு

கட்சிக்காரனே மதிக்கலைன்னா எப்படி ஜி? -அப்டேட் குமாரு

மக்கள் தான் ஒவ்வொரு முறை ஓட்டு போடுறதுக்கு முன்னாடியும் பிரதமரை மேடை ஏத்தி அழ உடுறாங்கன்னா, சொந்த கட்சிக்காரங்க நமோ அப்ளிகேசன்ல இருந்து அவர் அனுப்புற மெஸேஜுக்கு பதில் சொல்லாம, ரியாக்ட் பண்ணாம கலாய்ச்சு அவரை கடுப்பேத்துறாங்களேன்னு சோகத்துல நடந்து வந்துக்கிட்டிருந்தப்ப உடன்பிறப்பு ஒருத்தரைப் பாத்தேன். ஆர்.கே.நகர்ல டெப்பாசிட் வாங்காதப்பவே பா.ஜ.க தோத்ததுக்கு டிரீட் வெச்ச அஞ்சா நெஞ்சனாச்சே இவரு ஏன் கடுப்புல இருக்காருன்னு தெரியாம வாயக் கொடுத்துட்டேனப்பா. வெற்றிக்கொடி கட்டு படத்துல வடிவேலுவை அவர் மச்சான் கேட்ட கேள்வியா கேட்டு காது ரெண்டுத்தையும் அறுத்துத் தள்ளிட்டாரு. தளபதி பேனர் வைக்காதன்னு சொல்லியும் பேனர் வெச்சிருக்காங்க. அதுல கலைஞர் படத்தைக்கூட வைக்கல. சொந்தக்கட்சிக்காரனே சொல்பேச்சு கேக்கலன்னா, எதிர்க்கட்சிக்காரன் எப்படி மதிப்பான். சட்டமன்றம் வேற கூட்டப்போறாங்கன்னு எரிமலையா வெடிச்சிக்கிட்டு இருந்தாப்ல. அவரை சமாதானப்படுத்தலாம்னு பாத்தா, அப்டேட்டுக்கு டயம் ஆகிருச்சு. கெளம்பி வந்துட்டேன். நான் போய் என்ன ஏதுனு கேட்டுட்டு வந்துடுறேன். அப்டேட்டைப் படிச்சு வைங்க. உங்களுக்கு ஒரு போட்டி வெச்சிருக்கோம். இந்த அப்டேட்ல வேணும்னே பல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணிருக்கேன். சரியா கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு, அடுத்த ஆர்.கே.நகர் தேர்தல்ல பா.ஜ.க வேட்பாளரா நிற்க சிபாரிசு செய்யப்படும். ஸ்டார்ட் மீசிக்.

@Manoj Kumar

மருத்துவத்த படிச்சவங்கனால தான், அடுத்த தலைமுறைக்கு மருத்துவம் சொல்லித் தர முடியும்,,,

அதே போல நாம பெரியாரை படிச்சா தான், அடுத்த தலைமுறைக்கு பெரியாரியலை கொண்டு போய் சேர்க்க முடியும்,,,,

@Kozhiyaar

சிலர் நம்மை கொண்டாடியே 'தீர்த்து' விடுகிறார்கள்!!

@Sandy_Offfl

2018 க்கு எனது இலக்கு:

2017 இலக்குகளை நிறைவேற்றுவது, பாத்திங்க னா, அதை 2016 லே செய்திருக்க வேண்டியது,

ஏன்னா 2015 ல் அதை ஆரம்பித்திருக்க வேண்டியது, அதுவும் 2014 இல் திட்டமிடப்பட்டது...

@manipmp

மீட்டிங்கில் ஒரு முறை தலையாட்டிவிட்டால்

பிறகு நம்மை பார்த்தே பேசுவது

என்ன வியாதியோ.!!

@Prabakar Kappikulam

மதுரைக்காரங்க வீரம் மிக்கவர்கள்- நடிகர் ரஜினிக்காந்த் பேச்சு

அதுக்குத்தான் விடியவிடிய முழிச்சிருந்து அதிகமா தமிழ் படங்கள பாக்கக் கூடாதுன்னு சொல்றது..

@SumiSumathi

அதெப்பிடி, உலகத்துல எந்த கொரங்கும் ஒரு வீடு கட்டாத நிலையில, இந்திய கொரங்குங்க மட்டும் கடலுக்கு அடியில பாலம் கட்டுச்சு..?!

Abdulkader Jailane

மாசக் கடைசி தான் மந்த் என்ட்ல வருதுன்னு பாத்தா இந்த வருஷக் கடைசியும் மந்த் என்ட்ல தான் வந்து தொலைக்குது...

ஒரே கஷ்டமப்பா

Thalapathy Bharani

எதிர் கட்சிக்காரனை நான் பார்த்துக்குறேன் சொந்த கட்சிக்காரன் கிட்ட என்னை காப்பத்து என்று சொன்னபடியே சென்றார் நம் செயல்தலைவர் தளபதி

@chithiragupta

முதல ஹீரோ ..அப்புறமா சங்க தலைவர் ..அப்புறமா எம்ஏல்எ ..அப்புறமா டெல்லி விருது கோஸ் டூ விஷால்

தீரன் விஜயவர்மன்

நான் அரசியலுக்கு வந்தால் ஓட்டுக்கு பணம் தரமாட்டேன்!! - ரஜினி

முதல்ல வாடகை குடுங்க.. கோர்ட்டு சட்டி பானை எல்லாம் தூக்கி வெளிய போட சொல்லிருக்கு

@Prabakar Kappikulam

செய்தி : புத்தாண்டு அன்று போதையில் வாகனம் ஓட்டியதாக பிடிபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லாச் சான்று தரமாட்டோம் என காவல்துறை அறிவிப்பு.

இவ்வளவு கட்டுப்பாடு போட்டா அப்புறம் எப்டிய்யா அந்த ரெண்டாயிரம் கோடி டார்க்கெட்டை நெருங்க முடியும்.

இப்படிக்கு

டாஸ்மாக் அரசு சாராயக்கடை ஊழியர்கள்

Bala Salem

யோகி அவர்மேல இருந்த கேஸ்களை எல்லாம் அவரே ரத்து பண்ணிக்கிட்டாராம்.. தெரியுமா?

பக்தாள் : அதெல்லாம் கான்ஸ்டிடூசன்ல இருக்க பொலிட்டிக்கல் பொடிமாஸ்ல ஒரு முக்கியமான அஜெண்டா.. யூ நோவ்.... தானே சிட்டிங் தானை தலைவன்...

@Kozhiyaar

தரப்படும் உரிமையை விட,

போராடிப் பெறப்படும் உரிமை,

வீரியம் வாய்ந்தது!!

விரயம் செய்யப்பட மாட்டாது!!!

@Sandy_Offfl

2017இன் ஷார்ட்:

வாய்ப்புகள்

கைக்கும் வாய்க்கும் எட்டுச்சு...

ஆனா மூளைக்கு எட்டல...

Muthu Ram

வாகன விளக்குகள் பகல்லயும் எரியணும்னு பனிப்பிரதேசங்கள்ல மட்டும் தேவையான ஒரு விதியை, நாடு பூரா அமல்படுத்துறதுக்கு ஒரு முரட்டுத்தனமான முட்டாள்தனம் வேணும். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த புது டிவிஎஸ் XL -ல்ல ஒரு LED strip வச்சிருக்காங்க. நல்ல பவர். அதிகமான பேட்டரி எனர்ஜி தேவையில்ல. எல்லாம் சரி. ஆனா அதுக்கு ஒரு டிசைன் பண்ணிருக்காங்க பாருங்க.

அதாவது ஏற்கனவே இருந்த ஹெட் லைட் panel -க்கு உள்ள இந்த LED strip இருக்காது. அந்த ஹெட் லைட்ட replace பண்ணாம, நம்பர் ப்ளேட்டுக்கு மேல ஹெட் லைட்டுக்கு கீழ, தனியா இத பொருத்திருக்காங்க. அந்த பழைய ஹெட்லைட் சும்மாதான் இருக்கு.

ஒரு End user பத்தி கொஞ்சங்கூட கவலையே படாம, மனசாட்சி கூட இல்லாத ஒரு Designing & authorization team -ஆல் மட்டுந்தான் இப்படிலாம் யோசிக்க முடியும்.

@வாசுகி பாஸ்கர்

குழந்தை பிறந்தவுடன் அதன் காதை பார்த்து, அதே நிறத்தில் தான் அந்த குழந்தை இருக்குமென்கிற நிற ஆராய்ச்சியை ஆரம்பித்து விடுவார்கள். சமூகத்தின் நிற வேறுபாடு பிறப்பிலிருந்தே ஒட்டிக்கொள்கிறது. உங்கள் குழந்தை இந்த வேறுபாடுகளில்லாமல் வளர வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், கருப்பு பொம்மைகளையும் வாங்கி கொடுங்கள். பார்பி பொம்பைகளில் கருப்பு நிற பொம்மைகளும் உண்டு.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு Doll Test என்று ஒரு பரிசோதனை முறை வைத்திருக்கிறார்கள். கருப்பு பொம்மையையும், வெள்ளை பொம்மையையும் அருகருகே வைத்து, "அதில் எது நல்ல பொம்பை?" என்று கேட்கிறார்கள், குழந்தைகள் வெள்ளை நிற பொம்மையை தான் நல்ல பொம்மை என்கிறார்கள். "எது பிடித்திருக்கிறது?" என்றும் கேட்கிறார்கள், பெரும்பாலான பதில்கள் "வெள்ளை பொம்மை" என்றே வருகிறது. அதே போல கறுப்பின குழந்தைகளுக்கு வெள்ளை பொம்மை மீது ஒரு கோவம் இருப்பதையும் பார்க்க முடிகிறது, கோவமென்பதை விட ஒருவித ஏக்கமான பொறாமை எனச்சொல்லலாம்.

இந்த பாகுபாட்டை உடைப்பதற்கு குழந்தைகளுக்கு வலிய உணர்த்தாமல், வீட்டில் அங்கொன்றும் இங்கொன்றும் கருப்பு நிறைந்து இருக்குமேயானால், இந்த மனவேறுபாட்டை தளர்த்த தனியாக பயிற்சி ஏதும் கொடுக்கத்தேவையில்லை.

அப்பா, அம்மா, இருவருமே கருப்பு நிறத்தவர்களாக இருந்தாலும், வெள்ளை நிறத்தின் மீதான பிரமிப்பு நீங்க, கருப்பு நிறம் கருப்பாய் இருப்பவர்களிடத்திலேயே அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகள் தாம் இவை. நிற அரசியல், சமூகத்தின் பல சமத்துவ புரிதல்களுக்கான ஆதாரம்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017