மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

ரயில்வே தண்டவாளத்தில் மருத்துவ மாணவர் சடலம்!

ரயில்வே தண்டவாளத்தில் மருத்துவ மாணவர் சடலம்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் மருத்துவ மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது கொலையா, அல்லது தற்கொலையா என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கள்ளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சேசுராஜ் என்பவரின் மகன் அமிர்தராஜ். இவர் திருச்சி மருத்துவக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்துவந்தார். திருச்சி செல்வதற்காக அமிர்தராஜ் வழக்கம்போல் இன்று காலையில் கிளம்பியிருக்கிறார். இந்நிலையில், அவர் இறந்த நிலையில் சடலமாக கள்ளப்பள்ளி - கருப்பத்தூர் இடையிலான ரயில் பாதையில் தலை துண்டான நிலையில் கிடந்தார்.

அமிர்தராஜின் உடல் அருகில் கிடந்த அடையாள அட்டையை வைத்து, மருத்துவ மாணவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும், ரயில் பாதையில் கிடந்த அமிர்தராஜின் உடலைக் கைப்பற்றி, அதைப் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அமிர்தராஜ் இறப்பு குறித்து வழக்குப் பதிவுசெய்து இது கொலையா, அல்லது தற்கொலையா என்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017