மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

திருப்பதி : கூட்டநெரிசலில் பக்தர்கள் காயம்!

திருப்பதி : கூட்டநெரிசலில் பக்தர்கள் காயம்!

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று (டிசம்பர் 28)காயமடைந்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் 12.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் வைகுண்ட வாசல் வழியாகப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை 3525 விஐபி பக்தர்களுக்குத் தரிசன ஏற்பாடுகளைத் தேவஸ்தானம் செய்திருந்தது. சினிமா பிரபலங்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பல்வேறு மாநில நீதிபதிகள் ஏழுமலையானைத் தரிசித்தனர். இதனால் காலை 5 முதல் 8 மணி வரை பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க இயலவில்லை. காலை 8 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சுமார் 36 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்குப் பிரசாதம், வாட்டர் பாக்கெட், பால் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியதால் வரிசையில் செல்வதற்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்யவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டினர். வைகுண்டம் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியதால் பக்தர்கள் சாலைகள் முழுவதும் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். இன்று சிறப்பு தரிசனம், நடைபாதை தரிசனம் கிடையாது. எனவே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தன. எனினும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், திருப்பதி கோயிலில் மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் காயமடைந்தனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017