மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

டாஸ்மாக்: நிறுத்தப்பட்ட மிடாஸ் மது!

டாஸ்மாக்: நிறுத்தப்பட்ட மிடாஸ் மது!

சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான மதுபானங்கள் தயாரிக்கும் மிடாஸ் நிறுவனத்தில் இரண்டாவது முறையாகக் கடந்த இரண்டு நாட்களாகச் சோதனை நடத்தினார்கள் வருமான வரித் துறையினர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் மிடாஸுக்கு ரூ 110 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், பெரும்பாலும் மிடாஸ் கம்பெனியில் உற்பத்தியாகக் கூடிய மதுபானங்கள்தான் விநியோயகம் செய்யப்பட்டு வந்தன. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பால், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டதிலிருந்து, மிடாஸ் கம்பெனியிலிருந்து மாதம் 9 லட்சம் பெட்டிகள் மட்டுமே வாங்கி வந்தது டாஸ்மாக் நிர்வாகம். இதன் மதிப்பு ரூ 55 கோடியாகும்.

இந்நிலையில்தான் நவம்பர் மாதம் 9ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக நான்கு நாட்கள், வருமான வரித் துறையினர் சோதனைகள் செய்தபோது, மிடாஸ் கம்பெனியின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்தனர். மிடாஸ் நிர்வாகத்தின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்துள்ளதால், டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்கள் விநியோகம் செய்வதை நிறுத்தியுள்ளனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017