மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

உணவு விடுதிகளுக்கு ஆட்சியர் உத்தரவு!

உணவு விடுதிகளுக்கு ஆட்சியர் உத்தரவு!

சென்னையில் தள்ளுவண்டி முதல் ஸ்டார் ஹோட்டல் வரை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உணவு பாதுகாப்புத் தரச் சான்று மற்றும் உரிமம் பெற வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் சாலையோரம் விற்கப்படும் உணவுகள் சுகாதாரமற்றதாகவும், பாதுகாப்பற்றதாகவும் இருப்பதாகப் பல புகார்கள் எழுந்தன. இதுபோன்ற புகார்களைத் தவிர்க்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், இந்தப் பிரச்சினை முழுவதுமாகத் தீரவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னையிலுள்ள அனைத்து உணவு விடுதிகளும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உணவு பாதுகாப்பு தரச் சான்று மற்றும் உரிமம் பெற வேண்டும்.அப்படி உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்தச் சட்டம் தள்ளுவண்டி முதல் ஸ்டார் ஹோட்டல் வரை அனைவருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017