மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

100 ஆண்டு அதிமுக ஆட்சி: செல்லூர் ராஜு

100 ஆண்டு அதிமுக ஆட்சி: செல்லூர் ராஜு

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி இன்னும் மூன்று ஆண்டுகள் சிறப்பாகச் செயல்படும் என்று திருப்பூரில் இன்று (டிசம்பர் 29) தெரிவித்தார் அமைச்சர் செல்லூர் ராஜு.

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் ஆலோசனை கூட்டம், இன்று திருப்பூரில் நடைபெற்றது. தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக எம் எல் ஏக்கள் குணசேகரன், விஜயகுமார் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த கூட்டத்தில் தலைமையுரை ஆற்றினார்.

அதன் பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, “இன்னும் மூன்றரை ஆண்டுகள் இந்த ஆட்சி சிறப்பாகச் செயல்படும். தமிழக அரசின் செயல்பாடுகளே இதற்கு சாட்சி. ஜெயலலிதா சொன்னதுபோல, இன்னும் 100 ஆண்டுகள் ஆட்சி நிலைத்திருக்கும்” என்று கூறினார்.

முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார் செல்லூர் ராஜு. “எந்த ரேஷன் கடையிலும் பொருள் இல்லை என்ற நிலை இருக்கக் கூடாது; அனைவருக்கும் எல்லாப் பொருட்களும் கிடைக்க வேண்டுமென்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, கூட்டுறவு சங்கங்கள் மூலமாகச் செயல்படுகிற நியாயவிலை கடைகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் தொகுப்பு பொருட்களை இடர்பாடுகள் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017