மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

இரட்டைச் சவாரியில் தனுஷ்

இரட்டைச் சவாரியில் தனுஷ்

நடிப்பையும் இயக்கத்தையும் தனித்தனியே கவனித்து வந்த தனுஷ் ஒரே நேரத்தில் நடிப்பு, இயக்கம் என இரட்டைச் சவாரியில் பயணிக்க உள்ளார்.

கௌதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், வெற்றி மாறனின் ‘வட சென்னை’ படத்திலும் நடித்துவருகிறார். மாரி படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். பல திறமைகளைத் தன்னுள் வைத்திருக்கும் தனுஷ் ‘ப.பாண்டி’ படத்தின் மூலம் தன்னை நல்ல இயக்குநராகவும் நிரூபித்தார். தற்போது ஒரு படத்தை இயக்கி, நடிக்கவிருக்கிறார்.

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தனுஷை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கப்போவதாக முன்பு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இயக்கவிருக்கும் அடுத்த படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. முன்பு அறிவித்திருந்ததைப் போலவே இதில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். மற்ற அறிவிப்புகள் 2018ஆம் ஆண்டு வெளியாகும்” என்று அறிவித்திருக்கிறார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017