மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 123 தனியார் பள்ளிகளின் வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தனியார் பள்ளி வாகனங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்பும் அதிகளவில் ஏற்படுகிறது. கோபி நம்பியூர், பவானி, ஜம்பை பகுதிகளில் கடந்த வாரம் தனியார் பள்ளி வாகனங்கள் இரண்டு விபத்துக்குள்ளானது. அதனால், பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? விதிமுறைகளின்படி பள்ளி வாகனங்கள் பராமரிக்கப்படுகிறதா? என்பதைப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.

123 தனியார் பள்ளிகளின் வாகனங்களில் தீயணைப்பு கருவிகளின் நிலை, முதலுதவிப் பெட்டி, அவசர வழிக் கதவுகளின் தரம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. குழந்தைகளைக் கையாள்வது, அவசர காலங்களில் தீயணைப்புக் கருவியை உபயோகிப்பது ஆகியவை குறித்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்குச் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுபோன்று, ஈரோடு மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்ட வாகனங்களின் ஆய்வில் 10 வாகனங்களின் தகுதி சான்றைக் காட்டுமாறு போக்குவரத்து அதிகாரிகள் அந்தியூர், பவானி தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017