மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

சிம்பன்சியோடு ஜீவா அடுத்த பயணம்!

சிம்பன்சியோடு ஜீவா அடுத்த பயணம்!

நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே ஜோடி சேர்ந்திருக்கும் கொரில்லா படத்தில் முக்கிய கேரக்டரில் ஒரு சிம்பன்சியும் நடிக்க இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஜீவாவின் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் தற்போது கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். ஸ்மார்ட் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் `கீ’ மற்றும் சுந்தர்.சி.யின் கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்து வரும் ஜீவா அடுத்ததாக சிம்பன்சியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் கொரில்லா படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் டான் சாண்டி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

“இந்தப் படத்தில் நடிக்கும் சிம்பன்சியின் பெயர் ஹாங். இந்தப் படத்திற்காக தாய்லாந்தில் உள்ள புகழ்பெற்ற `சாமுட்’ விலங்குகள் பயிற்சி மையத்தில் கடந்த நான்கு மாதங்களாகப் பயிற்சி அளிக்கப்பட்ட சிம்பன்சி வரவழைக்கப்பட இருக்கிறது. ஹாலிவுட் படங்களான ஹாங்க் ஓவர் 2 மற்றும் பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் போன்ற படங்களில் நடித்த விலங்குகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்பட்டது” என்றார்.

இப்படம் குறித்து தொடர்ந்து பேசிய அவர், “சிம்பன்சியை மையமாகக் கொண்டே இந்தப் படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்தின் ஆக்‌ஷன் மற்றும் காமெடிக் காட்சிகளில் சிம்பன்சி இடம்பெறும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயம் படம் பார்க்கும் எல்லோரும் சிம்பன்சி செய்யும் சேட்டைகளைப் பார்த்து ரசித்து சிரிப்பார்கள். குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் கொண்டாடும் படமாக இது இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017