மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு!

முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பினை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்பு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கள் பரிசு தொகுப்பினை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழர் பண்டிகை பொங்கல் திருநாள், அறுவடைத் திருநாளாகவும், உலகத்து மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் திருநாளாகவும், விவசாயிகள் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவும் விளங்குகிறது.

பொங்கல் திருநாளை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை உடைய குடும்பங்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று கூறியுள்ள முதல்வர், பொங்கல் பரிசுத் தொகுப்பினால், 1 கோடியே 84 இலட்சம் குடும்பத்தினர் பயன்பெறுவர். இதன்மூலம், தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ.210 கோடி செலவு ஏற்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017