மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

அனில் அம்பானிக்கு உதவும் முகேஷ் அம்பானி

அனில் அம்பானிக்கு உதவும் முகேஷ் அம்பானி

கடனில் சிக்கித் தவிக்கும் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனச் சொத்துகளைக் கைப்பற்ற அவரது சகோதரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், அவரது சகோதரர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமும் இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் இருவேறு துருவங்களாய் இருக்கின்றன. இத்துறையில் நீண்ட காலமாய் இயங்கி வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் பெருத்த கடன் சுமையில் இருக்கும் நிலையில், மறுபுறம் புதிதாகச் சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ 16 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை ஈர்த்துச் சாதனை படைத்துள்ளது. ரூ.45,000 கோடிக்கும் மேலான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் கடனை அடைக்கும் விதமாக அந்நிறுவனம் தனது டவர் உள்ளிட்ட சொத்துகளை விற்பனை செய்ய முடிவு செய்தது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017