மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

புத்தாண்டு: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

புத்தாண்டு: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

புத்தாண்டை முன்னிட்டுச் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.

சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக 31ஆம் தேதி இரவு காமராஜர் சாலை மற்றும் பெசன்ட் நகர் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். அப்போது, தடையில்லாமல் வாகனங்கள் செல்லவும், விபத்தில்லாப் புத்தாண்டை கொண்டாடும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் அடைக்கப்படும். கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக வெளியே செல்வதற்கு இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். 9 மணிக்கு மேல் அங்குள்ள வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்திற்குப் பின்புறமாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும். காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. காமராஜர் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்திநகர், சுங்குவார் தெரு, பாரதிசாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சந்திப்புகளில் வாகனங்கள் நுழைய அனுமதியில்லை. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா முனை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் இரவு 9 மணி முதல் கொடிமர சாலை வழியாகத் திருப்பிவிடப்படும்.

டாக்டர் ராதாகிருஷ்னன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, ஆடம்ஸ் சாலை, கொடிமரத்து சாலை, போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலைக்கு இரவு 9 மணி முதல் அனுமதிக்கப்பட மாட்டாது.

அடையாரில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மியூசிக் அகாடமி வழியாக அண்ணா சாலை சென்றடையலாம். காரணீஸ்வரர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இரவு 10 மணி முதல் வடக்கில் கொடி மரச் சாலை வழியாக திருப்பிவிடப்படும். அந்த வாகனங்கள் அண்ணாசாலை, வெல்லிங்டன் சாலை, ஜி.பி. சாலை வழியாக அடையாறு செல்லலாம். எந்த வாகனங்களும் லூப்ரோடு வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. சீனிவாசபுரம் சந்திப்பு வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6ஆவது அவென்யூவில் 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. பெசன்ட் நகர் 6ஆவது அவென்யூ இணைப்பு சாலைகளான 5வது அவென்யூ, 4ஆவது பிரதான சாலை, 3ஆவது பிரதான சாலை, 16ஆவது குறுக்கு தெரு ஆகிய பகுதிகள் தடுக்கப்படும். மகாத்மா காந்தி சாலை, 7வது அவென்யூ சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017