மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

ஆடிட்டர் ஆஃபீஸில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!

ஆடிட்டர்  ஆஃபீஸில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!

புதுக்கோட்டையில், மனைவி வேலை பார்க்கும் அலுவலகத்துக்குள் புகுந்து அவரது கணவர் அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இந்திரா நகரைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சரண்யா அங்குள்ள தனியார் ஆடிட்டர் ஆஃபீஸில் வேலை பார்த்துவருகிறார்.

சில காலமாகவே சரண்யாவுக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. அலுவலகத்தில் வேறு ஒருவருடன் சரண்யாவுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்துள்ளார். இதனால் சரண்யா தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

வழக்கம் போல் இன்று (டிசம்பர் 29) காலை அலுவலகத்துக்குச் சென்ற சரண்யாவை பின் தொடர்ந்து அவரது கணவர் தொந்தரவு செய்துள்ளார். அலுவலகத்துக்குள் சென்றதும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த உதயகுமார் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரண்யாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதனால் அவருக்கு கை, கால் உட்பட உடம்பு முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சரண்யாவை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உதயகுமாரைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர். சந்தேகத்தின் பேரில் வெட்டியதாக உதயகுமார் கூறியுள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் வெட்டினாரா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017