மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

முத்திரைப் பதிவு அலுவலகங்கள் மீது புகார்!

முத்திரைப் பதிவு அலுவலகங்கள் மீது புகார்!

இந்தியக் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல், தனது நிறுவனத்தின் பிராண்ட் பெயரை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்ததற்காக 5 முத்திரைப் பதிவு அலுவலகங்களின் மீது வழக்குத் தொடுத்துள்ளது.

அமுல் நிறுவனம் பால், வெண்ணெய், நெய், ஐஸ்கீரிம், யோகர்ட், சீஸ், சாக்லேட், சுகாதார பானம் எனப் பல பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. ஒரு நிறுவனத்தின் பிராண்டுடன் தொடர்புடைய பெயரையோ, சின்னங்களையோ வேறு நிறுவனம் உபயோகிப்பது தவறாகும். ஆனால் உள்ளாடை, டிராக்டர் மற்றும் பலவேறு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் நிறுவனங்கள் சில அமுல் பிராண்டின் பெயரை விளம்பரத்திற்குப் பயன்படுத்தியுள்ளன. இந்நிறுவனங்களுக்கு அமுல் பிராண்டை உபயோகிக்க அனுமதி அளித்ததால் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத் போன்ற இடங்களில் அமைந்துள்ள முத்திரைப் பதிவு அலுவலகங்களின் மீது அமுல் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

குஜராத் கூட்டுறவுப் பால் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட் மற்றும் கேரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகியவை மட்டுமே அமுல் பிராண்டை உபயோகிக்கும் உரிமம் பெற்றுள்ளன. இந்நிலையில் அமுல் நிறுவன பிராண்டை உபயோகித்ததற்கும் அதற்கு அனுமதி வழங்கியதற்கும் எதிராக அந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017