மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

அதிமுக: நிர்வாகிகள் நீக்கம் தொடர்கிறது!

அதிமுக: நிர்வாகிகள் நீக்கம் தொடர்கிறது!

அதிமுகவில் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்களான, வி.பி. கலைராஜன், புகழேந்தி, நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டன.

நேற்று (டிசம்பர் 28) விழுப்புரம், தருமபுரி, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர் தஞ்சாவூர், தேனி ஆகிய பகுதிகளை சேர்ந்த 44 பேர் நீக்கப்பட்டனர். இந்நிலையில், தினகரன் ஆதரவாளர்களை நீக்கும் நடவடிக்கை இன்றும் (டிசம்பர் 29) தொடர்ந்துள்ளது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் சிவசாமி உள்பட திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017