மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

வைகுண்ட ஏகாதசி : திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

வைகுண்ட ஏகாதசி : திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (டிசம்பர் 29) அதிகாலை அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 12.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரு தினங்கள் மட்டும் சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 12.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் வைகுண்ட வாசல் வழியாகப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை 3525 விஐபி பக்தர்களுக்குத் தரிசன ஏற்பாடுகளைத் தேவஸ்தானம் செய்திருந்தது. சினிமா பிரபலங்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பல்வேறு மாநில நீதிபதிகள் ஏழுமலையானை தரிசித்தனர். இதனால் காலை 5 முதல் 8 மணி வரை பக்தர்களால் ஏழுமலையானைத் தரிசிக்க முடியவில்லை. காலை 8 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர்,தங்க தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி தங்க தேரில் மாடவீதிகளில் வந்து அருள்பாலித்தார்.

ஏழுமலையானை தரிசிக்க 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர். இன்று காலை தரிசனம் செய்த பக்தர்கள், நேற்று (டிசம்பர் 28) காலை 10 மணியிலிருது வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ்களில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பக்தர்களுக்காக 2 லட்சம் அன்ன பிரசாதம், 4 லட்சம் வாட்டர் பாக்கெட், 2 லட்சம் மோர் பாக்கெட் மற்றும் பால் வழங்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு பணியில் கூடுதலாக 1400 போலீஸார் ஈட்டுப்பட்டுள்ளனர்.

நாளை (டிசம்பர் 30) காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017