மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய ஒபாமா!

ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய ஒபாமா!

அமெரிக்க மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள முக்கிய பிரபலம் யார் என்ற கால்அப் என்ற நிறுவன கருத்துக்கணிப்பில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 1,049 பேர்களிடம் டிசம்பர் 4-11 தேதிகளில் கால்அப் நிறுவனம் கருத்துக்கணிப்பொன்றை நடத்தியது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த கணிப்பில், ஆளும் அமெரிக்க அதிபரே முதலிடம் பெறுவது வழக்கம். இதனை மீறி, இந்த ஆண்டு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு 17 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு, 22 சதவீதம் பேர் இவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் மூலமாக, இவர் பத்தாண்டுகளாக அமெரிக்கர்களின் மனதில் இடம்பிடித்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

இரண்டாவது இடத்தைப் பிடித்த தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கர்களின் மனதில் இடம்பிடித்துள்ள பெண் பிரபலங்கள் பட்டியலில் ஹிலாரி கிளிண்டன் முதலிடம் பெற்றிருக்கிறார். இவருக்கு 9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இவர், தொடர்ந்து 16 ஆண்டுகளாக முதலிடத்தை வகித்துவருகிறார். இவருக்கு அடுத்த இடத்தை மிச்செல் ஒபாமா பிடித்துள்ளார். அதேவேளையில் ட்ரம்பின் மனைவி மெலானியாவுக்கு 1 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017