மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

தென்னாப்பிரிக்க அணியிலும் குழப்பம்!

தென்னாப்பிரிக்க அணியிலும் குழப்பம்!

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ளது. களமிறங்கும் அணியில் யாரைச் சேர்ப்பது, யாரை விலக்குவது என்னும் குழப்பம் இந்திய அணியை மட்டுமின்றித் தென்னாப்பிரிக்க அணியையும் சூழ்ந்துள்ளது.

இந்திய அணியில் கிட்டத்தட்ட அனைவருமே கடந்த ஆண்டில் சிறப்பாக விளையாடியிருப்பதால், விளையாடும் அணியைத் தேர்வு செய்வது இந்திய அணிக்குக் குழப்பமான ஒன்றாகவே உள்ளது. தென்னாப்பிரிக்க அணியிலும் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

4 நாள் டெஸ்ட் போட்டியில் இரண்டே நாட்களில் ஜிம்பாவே அணியை வீழ்த்தி, தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. “அணியின் கேப்டன் டூ பிளிஸ்ஸி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னும் பங்கேற்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் இந்தியாவுடனான போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது என்பதால் தற்போதுள்ள அணியிலிருந்து யாரை நீக்கம் செய்வது என்பது பெரும் நெருக்கடியாக உள்ளது” என டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.

“தற்போதுள்ள வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றனர். எனவே யாரை நீக்குவது என தேர்வு செய்வது மிகக் கடினமான ஒன்று. என்னைப் பொறுத்தவரை அணியில் வாய்ப்பு கிடைத்தால் 4ஆவது வீரராக களமிறங்கி விளையாடுவேன்” என்றும் கூறியுள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017