மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

நான்காவது நாளாகப் பட்டாசு ஆலைகள் மூடல்!

நான்காவது நாளாகப் பட்டாசு ஆலைகள் மூடல்!

சிவகாசியில் தொடர்ந்து நான்காவது நாளாகப் பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் தொடருவதால் நாள் ஒன்றுக்கு ரூ. 15 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கைத் திரும்ப பெறக் கோரி சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றுடன் (டிசம்பர் 29) நான்காவது நாட்களாக வேலை நிறுத்தம் தொடருகிறது. 830 பட்டாசு தொழிற்சாலைகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,நாளொன்றுக்கு ரூ. 15 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 28) அகில இந்திய பட்டாசு சங்க கூட்டமைப்பின் மாநாடு சிவகாசியில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மாரியப்பன், பட்டாசு மற்றும் அதனைச் சார்ந்த உப தொழில் கூட்டமைப்பு சங்கத்தினரையும் பட்டாசு தடை வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017