மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

குஜராத் பாஜக சரிவு: தலைமைச் செயலாளர் விளக்கம்!

குஜராத் பாஜக சரிவு: தலைமைச் செயலாளர் விளக்கம்!

குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் அதன் சரிவுக்குக் காரணம் விவசாயிகளின் வறட்சியும், வேலையின்மையுமே என்று குஜராத் தலைமைச் செயலாளர் ஜே.என். சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத் வர்த்தக, தொழில் கூட்டமைப்பின் சார்பில் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துவக்க விழா நேற்று (டிசம்பர் 28) அகமதாபாத்தில் நடந்தது. இதில் பேசிய தலைமைச் செயலாளர்,

‘’அண்மையில் நடந்த தேர்தலில் அரசின் வெற்றியை பாதித்ததற்கு இரு முக்கிய காரணிகள் இருக்கின்றன. ஒன்று மாநிலம் முழுதுமே விவசாயிகளுக்கு இருந்த அதிருப்தி குறிப்பாக சௌராஷ்ரா பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்ட அதிருப்தி. அடுத்ததாக மாநிலம் முழுதும் இருக்கும் வேலையின்மை பிரச்னை.

இந்நிலையில் வேலையின்மை பிரச்னையை தீர்க்கும் விதமாக கார்மெண்ட் தொழிலை இந்த அமைப்பு மேம்படுத்தும் என்று கருதுகிறேன். கார்மெண்ட் தொழில் வளர்ச்சியின் காரணமாக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார் தலைமைச் செயலாளர் சிங்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017