மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

110 கிலோ மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

110 கிலோ மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்குக் கடத்த முயன்ற சுமார் 110 கிலோ மதிப்புள்ள கஞ்சாவை காவல்துறையினர் தூத்துக்குடியில் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தூத்துக்குடி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த போவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, தூத்துக்குடி - திருச்செந்தூர் பைபாஸ் அருகில் ஆந்திர மாநில எண் கொண்ட காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது காரின் பின்பகுதியில் 3 சாக்கு மூட்டைகளில் 110 கிலோ கஞ்சா இருந்தது. இந்தக் கஞ்சாவின் மதிப்பு ரூ.11 லட்சம் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, காரில் இருந்த ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரத்தினகுமார், சாய்குமார் ஆகிய 2 பேரைக் கைதுசெய்தனர். பின்பு கஞ்சாவையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017