மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

சீன மருந்துக்கு இறக்குமதிக் குவிப்பு வரி!

சீன மருந்துக்கு இறக்குமதிக் குவிப்பு வரி!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆண்டிபயாடிக் மருந்து ஒன்றுக்கு இறக்குமதிக் குவிப்பு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

சீனாவிலிருந்து அதிகளவிலான ஆஃப்லோக்சசின் (பாக்டீரியாத் தொற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து) வகை மருந்து இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டுத் தயாரிப்பாளர்களுக்கு போதிய சந்தை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே விலை குறைவாகச் சீனாவிலிருந்து இம்மாத்திரைகள் குறைந்த விலையில், அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க வேண்டுமென்று ஆர்த்தி டிரக்ஸ் லிமிடெட் நிறுவனம் புகார் அளித்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் இறக்குமதிக் குவிப்பு வரி பொது இயக்குநரகம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த மாத்திரைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் ஒரு கிலோ மருந்துக்கு அதிகபட்சமாக 9.48 டாலர் (சுமார் ரூ.605) இறக்குமதிக் குவிப்பு வரி நிர்ணயிக்க இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இறக்குமதிக் குவிப்பு வரி பொது இயக்குநரகம் கூறியுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017