மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

ஜப்பான் மொழியில் பாகுபலி 2!

ஜப்பான் மொழியில் பாகுபலி 2!

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் உருவான பாகுபலி 2 திரைப்படம் இந்தியாவில் வசூல் சாதனை படைத்தது மட்டுமல்லாமல் சர்வதேச சந்தையையும் குறிவைத்துக் களம் கண்டுவருகிறது.

இந்தியத் திரைப்படங்களுக்கான சந்தை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் விரிவடைந்துவருகிறது. இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் படங்கள் வெளியாவது மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் மொழிமாற்றம் செய்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தங்கல் படம் சீனாவில் உருவாக்கிய சந்தையை பாகுபலி 2 படமும் பயன்படுத்திக்கொண்டது. அங்கும் இந்திய படங்களுக்கான ரசிகர்கள் பெருமளவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பாகுபலி 2 திரைப்படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இன்று (டிசம்பர் 29) டோக்கியோவில் வெளியாகியுள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகடா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி மாதம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரஷ்யாவிலும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017