மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்த வேண்டும்!

அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்த வேண்டும்!

உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமாகவும், போதிய ஆசிரியர்களை நியமிப்பதன் மூலமாகவும், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, அரசுப் பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் படிக்கும் நிலைமை இருந்தது. 1980ஆம் ஆண்டுக்குப்பிறகு தனியார் பள்ளிகளின் வரவால், இந்த நிலையில் மாற்றம் உண்டானது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகமெங்கும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பரவலாக உயரத் தொடங்கியது. இதனால், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 39,348 அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32,053 பள்ளிகளில், 80க்கும் குறைவான மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 81.46% பள்ளிகள் இந்த நிலையில் உள்ளன. அதேபோல, மொத்தமுள்ள 29,696 தொடக்கப் பள்ளிகளில் 86.81% பள்ளிகளில் 80க்கும் குறைவான மாணவர்கள் படிக்கின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் இதே நிலைதான். சில பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதனைக் குறிப்பிட்டு, இன்று (டிசம்பர் 29) அறிக்கை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

”தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இந்த நிலை என்றால் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கக்கூடும். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் நர்சரி பள்ளிகளில் குறைந்தபட்சம் 800 பேரும், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 1200 பேரும் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 மடங்கு குறைவாக உள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன் அனைத்து மாணவர்களும் அரசு பள்ளிகளில் தான் பயின்றனர். ஆனால், இப்போது கிட்டத்தட்ட 50% மாணவர்கள் தனியார் பள்ளிகளில் பயிலும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகப் பெற்றோர்களில் பாதிப்பேர் அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது.

அரசுப் பள்ளிகள் மூலம் தான் அறம் சார்ந்த கல்வியை போதிக்க முடியும். எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதன் மூலமும், மாணவர்களின் கல்வி முன்னேற்றமே ஆசிரியர்களின் கடமை என்பதை உணர்த்துவதன் மூலமும் அனைத்து அரசுப் பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும். அனைத்துத் தரப்பு மாணவர்களும் தேடிவந்து அரசுப் பள்ளிகளில் சேரும் நிலையை தமிழகத்தின் பினாமி ஆட்சியாளர்கள் ஏற்படுத்த வேண்டும்” என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017