மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

பாதுகாப்பு வசதி இல்லாததே விபத்துக்குக் காரணம்!

பாதுகாப்பு வசதி இல்லாததே விபத்துக்குக் காரணம்!

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே விபத்துகளுக்கு முக்கிய காரணம் என இந்திய நுகர்வோர் சங்க தலைவர் நிர்மலா தேசிகன் கூறியுள்ளார்.

இந்திய நுகர்வோர் சங்கம் மற்றும் நுகர்வோர் குரல் அமைப்புகளின் சார்பில் சென்னையில் நேற்று(டிசம்பர் 28) கார் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு நுகர்வோர் சங்க தலைவர் கூறியது: "ஆண்டுக்கு 20 லட்சம் கார்களுக்கு மேல் வாங்கி கார் நுகர்வில் இந்தியா உலகில் 6 இடத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் 400 பேர் வீதம் ஆண்டுக்கு 1.50 லட்சம் இந்தியர்கள் விபத்துகளால் உயிர் இழக்கின்றனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படும் கார்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள், இங்கு விற்பனையாகும் கார்களில் இல்லை.

வெளிநாடுகளில் கார் நுகர்வோர்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்பு தான் கார் வாங்குகின்றனர். ஆனால் இந்தியர்களாகிய நாம் கார்களின் தோற்றம், விலை மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை மட்டுமே கவனித்து வாங்குகிறோம். இதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன" என்று கூறினார்.

''எலக்ட்ரானிக் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்துவது மற்றும் காரை சோதித்த பின்பு பயணிப்பது ஆகியவற்றை கடைப்பிடித்தால் 50 சதவீத விபத்துகளைக் குறைக்கலாம்'' என்று நுகர்வோர் குரல் அமைப்பின் தலைவர் உபாத்யாயா பேசினார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017