மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

அனுஷ்கா ஷர்மாவிற்கு பீட்டா விருது!

அனுஷ்கா ஷர்மாவிற்கு பீட்டா விருது!

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா பீட்டாவின் சிறந்த நபருக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிகே, ஜப் தக் ஹை ஜான், ஏ தில் ஹை முஷ்கில் ஆகிய இந்தி படங்களில் நடித்த நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா சைவப் பிரியர். மேலும் விலங்குகள் பாதுகாப்பகங்களுக்குச் செல்வது, அவற்றின் பணிகளைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஊக்குவிப்பது, பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளால் விலங்குகள் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மும்பையில் குதிரை உள்ளிட்ட விலங்குகள் மூலம் வண்டி இழுப்பதைத் தடை செய்யக் கோருவது என விலங்குகளைக் காப்பதில் அனுஷ்கா சர்மாவின் பங்கு தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பீட்டா அமைப்பின் சார்பில் விலங்குகள் நலனுக்காக சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக அவருக்கு இந்த ஆண்டு பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பீட்டா அமைப்பின் இணையதள பக்கத்தில் நேற்று (டிசம்பர் 28) அதன் இணை இயக்குநர் சச்சின் பங்கேரா, “அனுஷ்கா ஷர்மா பெருமைக்குரிய விலங்குகள் உரிமை காப்பாளர். அவரின் அன்பும் முன்னெடுப்புகளும் எல்லை இல்லாதது. அவரின் ஆரோக்கியமான சைவ உணவுப் பழக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று பீட்டா அழைப்பு விடுக்கிறது. அதேபோல முடியும் நேரங்களில் எல்லாம் விலங்குகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும். விருதுக்கு அனுஷ்காவைத் தேர்வு செய்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017