மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

மும்பையில் தீ விபத்து:14 பேர் பலி!

மும்பையில் தீ விபத்து:14 பேர் பலி!

மும்பையில் உள்ள கமலா மில்லில் நேற்று (டிசம்பர் 28) நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பையின் லோயர் பேரலைச் சேர்ந்த கமலா மில் வளாகத்தில் ஊடகங்கள், வர்த்தக நிறுவனங்கள் என ஏராளமான அலுவலகங்கள் அமைந்துள்ளன. மூன்றாவது மாடியில் உள்ள உணவு விடுதியில் நேற்று நள்ளிரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டு, மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ வேகமாகப் பரவிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தத் தீ விபத்தில், 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில் 11 பெண்களும், 3 ஆண்களும் அடங்குவர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பலர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தக் கட்டிடத்தில் மும்பையின் டைம்ஸ் நவ், டிவி 9, ரேடியோ மிர்ச்சி, , உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்ர்டன. ரெஸ்டாரெண்ட், பப் ஆகியவையும் இங்கே உள்ளன. எனவே இது 24 மணி நேரமும் பரபரப்பாகவே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், "மும்பை தீ விபத்து மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவிஸ்,"மும்பை கமலா மில்லில் தீ விபத்து ஏற்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த பிஎம்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017