மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

எவரெஸ்ட்: இந்தியாவை நிராகரித்த நேபாளம்!

எவரெஸ்ட்: இந்தியாவை நிராகரித்த நேபாளம்!

கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தை அடுத்து, நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் சிகரத்தைத் திரும்பவும் அளக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் உதவியைப் பெற நேபாளம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7.8 ரிக்டர் அளவில் நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இதனால், அங்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. பல லட்சம் பேர் வீடிழந்தனர். 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் பிரச்னையால், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளக்க வேண்டிய தேவை எழுந்திருப்பதாகச் சந்தேகம் தெரிவித்தது இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்.

இதற்காக, நேபாள சர்வே துறையுடன் இணைந்து ஆய்வு நடத்த இந்தியா சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால், நேபாளம் நம்முடைய வேண்டுகோளை ஏற்கவில்லை. சீனா மற்றும் இந்தியாவின் உதவிகளைப் பெற மாட்டோம் என்றும் தாங்களே எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளந்துகொள்வோம் என்றும் தெரிவித்திருக்கிறது அந்நாட்டு அரசு என்றிருக்கிறார் இந்தியாவின் சர்வேயர் ஜெனரல் கிரிஷ்குமார்.

மேலும், எவரெஸ்ட் சிகரத்தை அளப்பதில் இந்தியா 1956ஆம் ஆண்டு உதவி செய்ததாகவும், 1975 மற்றும் 2005இல் நேபாளத்துடன் சீனா இணைந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017