மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

விரைவில் அடுத்த வீடியோக்கள்: தினகரனின் திட்டம்!

விரைவில் அடுத்த வீடியோக்கள்:  தினகரனின் திட்டம்!

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற கையோடு நேற்று (டிசம்பர் 28) பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்து வந்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் வெற்றி பெற்றதற்காக சசிகலாவிடம் ஆசி பெற்றதாகவும், அவர் மௌன விரதத்தில் இருப்பதாகவும் கூறினார்.

இம்முறை தினகரனிடம் சசிகலா பேசவே இல்லை என்றும், தினகரன் மீது கோபமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், அது பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓ.பன்னீர் - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தன்னிடம் இருக்கும் அடுத்த கட்ட ஆதாரங்களை வெளியிடுவதில் தினகரன் தீர்மானமாக இருக்கிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்!

அவர்கள் வட்டாரத்தில் பேசும்போது பல சூடான சுவாரஸ்யங்கள் கிடைத்தன. அவற்றைத் தொகுத்துத் தருகிறோம்.

சேகர் ரெட்டி டைரி!

ஜெயலலிதா இறந்து மூன்றாவது நாளே மத்திய அரசு அதிமுக மீதான வெளிப்படையான அட்டாக்கைத் தொடங்கிவிட்டது. 2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா இறந்தார். மூன்று நாள்கள் கழித்து டிசம்பர் 8ஆம் தேதி தியாகராய நகர் விஜயராகவா சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு, அபிபுல்லா சாலையில் உள்ள சேகர் ரெட்டியின் அலுவலகம் என பல இடங்களில் வருமான வரித் துறை சோதனையிட்டது. இதில் அப்போதுதான் அறிமுகமான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் உரிய ஆவணங்களின்றிக் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறையே அறிவித்தது. சேகர் ரெட்டியின் டைரி உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

தினகரனுக்கு வந்தது எப்படி?

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர் முதல்வர் பதவியில் இருந்து விலகியதையடுத்து சசிகலாவே முதல்வர் பதவியில் அமர எண்ணியபோதுதான் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். இதையடுத்து சசிகலா அணி சார்பில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். அந்நிலையில்தான் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரிக் குறிப்புகளில் இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் பற்றிய ஆவணத்தைத் தமிழகத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கிறார்கள் அமலாக்கத் துறையினர்.

அந்தக் குறிப்புகளை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கிறார் தமிழகத் தலைமைச் செயலாளர். அப்போது எடப்பாடி பழனிசாமி தினகரனின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அந்தக் குறிப்புகளை தினகரனிடமும் பகிர்ந்துகொள்கிறார். அந்த குறிப்புகளில்தான் ஓ.பன்னீரைக் குறிப்பிட்டு, பெரியவர் என்று எழுதப்பட்டிருந்தது. அதில் எடப்பாடி பெயரும் இருப்பதாகவும், இல்லை என்றும் இரு வேறு தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. முதலில் அறிவிக்கப்பட்டிருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு முன்பே, அதாவது கடந்த ஏப்ரலுக்கு முன்பு, தினகரனை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கிவிட்டார். எடப்பாடி, பன்னீர் இருவருமே சசிகலா குடும்பத்துக்கு எதிரிகளாயினர்.

இந்த நிலையில்தான் இரு வாரங்களுக்கு முன்பு அதாவது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பு சேகர் ரெட்டியின் டைரியில் ஓ.பன்னீருக்குப் பணம் கொடுக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி அந்த டைரி குறிப்பு படங்களோடு பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் வெளியானது. ஓ.பன்னீருக்கு எதிரான இந்தச் செய்தியை அடுத்து பன்னீரின் சொத்து மதிப்பு பற்றியும் பல தகவல்கள் வெளியாகின. இணைந்தும் இணையாமல் இருக்கும் அணிப் பிரச்னைக்கு இடையில் முதல்வர் எடப்பாடிதான், பன்னீருக்கு எதிரான இந்த ஆவணங்களை வெளியிட வைத்தார் என்று ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் கிளம்பியது.

ஆனால், இந்த ஆவணங்கள் வெளியானதற்குப் பின்னணியில் இருந்தது தினகரன்தான் என்கிறார்கள் அவரது வட்டாரத்திலேயே. பன்னீருக்கு இந்த ஆப்பு என்றால் அடுத்த ஆப்பு பழனிசாமிக்கு என்கிறார்கள்.

முதல் வீடியோ!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் கடைசி பிரசார நாளன்று, அம்மாவைக் கொன்றவர்களுக்கா ஓட்டு என்று பழனிசாமி - பன்னீர் தரப்பு துண்டுப் பிரசுரம் அடித்து ஒட்டினார்கள் என்பதற்காக மறுநாள் அதாவது டிசம்பர் 20ஆம் தேதி இடைத்தேர்தலுக்கு முதல் நாள் தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ. ஓர் அதிரடி வீடியோவை வெளியிட்டார். அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் ஜூஸ் குடிப்பது போன்ற காட்சியும் கால்கள் தெரிய அவர் படுத்திருப்பதும் காட்சிகளாக ஓடின.

‘அம்மாவை மருத்துவமனை கொண்டுபோனதே நினைவு இல்லாமல்தான், அவரது கால்களை எடுத்துவிட்டார்கள்’ என்றெல்லாம் பழனிசாமி - பன்னீர் தரப்பின் தகவல்களுக்கு அந்த வீடியோவே பதில் சொல்ல, அதுவும் தினகரன் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு தினகரனை வெற்றிவேல் சந்திக்கப் போனபோது, “நீங்க என் வெற்றி... இந்த வெற்றி உங்க வெற்றி” என்று தினகரனே சிரித்தாராம்.

இன்னும் இருக்கும் 14 வீடியோக்கள்!

அந்த வீடியோவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் பழனிசாமியும், பன்னீரும். இந்த நிலையில் இதேபோன்று சுமார் 14 வீடியோக்கள் தினகரன் வசம் இருப்பதாகவும் அவை எப்போது வேண்டுமானாலும் வெளிவரும் என்றும் தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

அந்த வீடியோக்களில் ஜெயலலிதாவுக்கு சசிகலா சாப்பாடு போடுவது போலவும் சசிகலாவுடன் ஜெயலலிதா பேசிக்கொண்டிருப்பது போலவும் காட்சிகள் இருக்கின்றன. இன்னும் குறிப்பாக ஜெயலலிதாவே பன்னீர், பழனிசாமியில் ஆரம்பித்து கட்சிப் பிரமுகர்கள் சிலரைப் பற்றி பெயர் குறிப்பிட்டு அவர்கள் மீதான புகார்களை விரிவாகப் பேசியதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கின்றன.

அவை எல்லாம் இப்போது தினகரனிடம்தான் இருக்கின்றன. வேளை வரும்போது அதை வெளியிடுவார். அப்போது அவர்களின் இன்னும் பல சுயரூபங்கள் ஜெயலலிதாவின் வார்த்தைகளாகவே வரும்’ என்கிறார்கள் தினகரன் வட்டாரத்தில் நடப்பவற்றை அறிந்தவர்கள்.

சசிகலா மறுத்தாலும்...

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017