மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

முத்தலாக்: பாஜக மீது அதிமுக குற்றச்சாட்டு!

முத்தலாக்: பாஜக மீது அதிமுக குற்றச்சாட்டு!

முத்தலாக் என்ற மரபுரிமையைப் பயன்படுத்தி முஸ்லிம் பெண்களைத் தொடர்ந்து மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை கிரிமினல் குற்றம் என்று வரையறுத்து மக்களவையில் நேற்று (டிசம்பர் 28) மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா நேற்று மக்களவையில் கடுமையாகத் தாக்கிப் பேசினார். நேற்று இது தொடர்பாக நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அன்வர் ராஜா, “முத்தலாக் சொல்வதை கிரிமினல் குற்றமாக பார்ப்பதை ஏற்க முடியாது மூன்றாண்டு சிறை தண்டனை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை நீக்கிவிட்டு நீதிமன்றம் என்ன சொன்னதோ, அதை சட்டமாக்குங்கள். மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்துவிட்டு குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை சட்டமாக்குங்கள்.

இதைக் கிரிமினல் குற்றம் என்று நீதிமன்றம் சொல்லவில்லை. நாங்கள் ஷரீயத் சட்ட அடிப்படையில் வாழ்கிறோம். இந்த முத்தலாக் என்பது தவறென்றால் நாங்கள் எங்களுக்குள் கூடி முடிவெடுப்போம் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அதை மேற்கொள்ளும்.

முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டால் அது இஸ்லாமியப் பெண்களைப் பாதிக்கும். குர்ஆன் ஒன்டைம் செட்டில்மென்ட் கொடுக்கச் சொல்கிறது. அப்படி இல்லாமல் கணவனைச் சிறையில் அடைத்துவிட்டால் அந்தப் பெண் ரோட்டில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று எச்சரித்தார் அன்வர் ராஜா.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017