மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

தனுஷ் படத்தில் வரலட்சுமி

தனுஷ் படத்தில் வரலட்சுமி

மாரி படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ள ‘மாரி 2’இல் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை வரலட்சுமி.

கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் எனக் கருதும் நடிகைகளுக்கு மத்தியில் கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி, கொடுக்கப்படுகிற கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தந்து நடித்து வருபவர் வரலட்சுமி. விக்ரம் வேதாவில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியவர், நிபுணன், சத்யா உள்ளிட்ட படங்களிலும் சிறந்த பங்களிப்பைச் செய்தார். பிரதான கதாபாத்திரத்தில் ‘சக்தி’ படத்தில் நடித்து வருபவர், Mr.சந்திரமௌலி படத்திலும் நடித்து வருகிறார். அடுத்ததாக ‘மாரி 2’வில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக இயக்குநர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவியும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸும் நடிக்க இருக்கிறார்கள். இதில் இரண்டாவது நாயகனாக கிருஷ்ணா நடிக்கவுள்ளார். முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் யுவன் சங்கர் ராஜா பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷுடன் இணைந்திருக்கிறார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017