மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

பெண்களுக்கு எதிரான குற்றத்துக்குக் கடுமையான தண்டனை!

பெண்களுக்கு எதிரான குற்றத்துக்குக் கடுமையான தண்டனை!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆள் கடத்தல், அடிமைப்படுத்துதல் போன்ற குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க மத்தியப் பெண்கள் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை மூலம் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

ஆள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொத்தடிமைகளாக வைத்திருத்தல், ஆபாச படம் எடுத்தல், உடல் உறுப்புகளை அகற்றுதல், கட்டாயப்படுத்திப் பிச்சை எடுக்க வைப்பது போன்ற குற்றங்களுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்படும்.

இந்தச் சட்டத்தின்படி, ஆள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்குப் பத்தாண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும். அதே நபர் மறுபடியும், மறுபடியும் அதே குற்றத்தைச் செய்து கைது செய்யப்பட்டால், ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

கொடூர குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். பாலியல் ரீதியாகத் தாக்குதல் நடத்தப்பட்டு, எடுக்கப்பட்ட படங்களை எலெக்ட்ரானிக் முறையிலோ, அல்லது புத்தகமாக வைத்திருந்தாலோ மூன்று ஆண்டிலிருந்து ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017