மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

பணக்காரனாகவே எப்போதுமே இருக்க வேண்டுமா? அப்படின்னா, இதை மட்டும் கொஞ்சம் இறக்கி வைங்க!

விமானத்தில் தன்னருகே அமர்ந்திருந்த சிறுமியிடம் தன் அறிவுக்கூர்மையைக் காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை அந்த சிறுமியிடம், “உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா? பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்” என்றார்.

படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, “என்ன மாதிரி கேள்விகள்?” என்று சிறுமி கேட்டாள்.

“கடவுள் பற்றியது... No God, No hell and life after death. கடவுள், நரகம் எதுவும் கிடையாது. இறந்த பிறகு என்ன?” என்றார்.

அந்தச் சிறுமி யோசித்து விட்டு, “நான் முதலில் சில கேள்விகள் கேட்கட்டுமா?” என்றாள்.

புன்சிரிப்போடு அவர், “தாராளமாக” என்றார்.

“ஒரே புல்லைதான் பசு, மான், குதிரை உணவாக எடுத்துக்கொள்கிறது. ஆனால், வெளிவரும் கழிவு shit வெவ்வேறாக இருக்கிறது. பசுவுக்குச் சாணியாகவும், மானுக்கு சிறு உருண்டையாகவும், குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளிவருகிறது. எப்படி?” என்றாள்

தத்துவவாதி இதுபோன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை. திகைத்துவிட்டார்.

“தெரியவில்லையே” என்று கூறினார்.

“இதுகூட உங்களுக்குத் தெரியவில்லை. பின் ஏன் நீங்கள் கடவுள், நரகம் பற்றியும் இறப்புக்குப் பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்? You dont know even about shit,,why you are bothering about God?” என்று கேட்டாள்.

சிறுமியின் புத்திசாலித்தனத்தால், தத்துவமேதை வாயடைத்து போய்விட்டார்.

எவரையும் குறைவாக எடை போடக்கூடாது. தலைக்கனமும் கூடாது.

கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு. Known is a drop, unknown is anocean.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலும் திறமை வாய்ந்தவர்கள் தான். நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தலைக்கனத்துடன் இருந்தால் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் போய்விடும். இதுதான் இயற்கையின் நியதி.

ஆதலால் தலைக்கனத்தை இறக்கி வையுங்கள். எப்போதுமே மகிழ்ச்சியுடன் பணக்காரனாகவே வாழ முடியும்.

நல்லவேளை, இதுலதான் அந்த தத்துவ மேதை சாக்ரடீஸ், தத்துவ மேதை திருவள்ளுவர், தத்துவக் கண்டுபிடிப்பாளர் கிரகாம்பெல் அப்படின்னு அள்ளி விடாமல் சொல்லிருக்காங்க.

கொஞ்சம் நினைச்சு பாருங்க அப்படி சொல்லியிருந்தா எப்படி இருந்திருக்கும்.

திருந்திட்டாய்ங்களோ?

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017