மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

முன்னணி இயக்குநர்களுடன் சிம்பு

முன்னணி இயக்குநர்களுடன் சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்தை தொடர்ந்து சிம்பு மற்றொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லை, தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார் என்று தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் போன்றவற்றில் புகார்கள் எழுந்துவருகின்றன. சிம்பு எந்த படத்திலும் நடிக்க முடியாதவாறு அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப் போவதாகப் பேச்சுகளும் எழுந்தன. ஆனால், அவரோ அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துவருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரோடு இணைந்து சிம்புவும் நடித்து வருகிறார். தற்போது இந்தப் படத்தில் பங்குபெறும் நடிகர்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மணிரத்னத்தோடு சிம்பு இணைந்து எடுத்த செல்பியும் சமீபத்தில் வெளியானது.

இந்தப் படத்தை தொடர்ந்து தனி ஒருவன், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கவுள்ள புதிய படத்தில் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனி ஒருவன் வெற்றிக்குப் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேலைக்காரன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில் மோகன் ராஜா அடுத்ததாக சிம்பு நடிக்கவுள்ள படத்தின் வேலைகளில் இறங்கவுள்ளார். ரொமண்டிக் ஜானரில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017