மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

தீபா அலுவலகத் தாக்குதல் நாடகமா?

தீபா அலுவலகத் தாக்குதல் நாடகமா?

கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் உறவினர் தீபாவின் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுபற்றிய விசாரணையின் முடிவில், தீபாவின் அலுவலகப் பணியாளர்களையே கைது செய்திருக்கின்றனர் காவல் துறையினர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சிவஞானம் தெருவில் வசித்துவருகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ‘எம்.ஜி.ஆர் - அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை நடத்திவருகிறார். இந்த அலுவலகம், இவரது வீட்டின் அருகிலேயே இயங்கிவருகிறது.

டிசம்பர் 26ஆம் தேதியன்று நள்ளிரவில் தீபாவின் அலுவலகம் கல்வீச்சில் பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்பட்டது. இந்தத் தாக்குதலில் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அருகிலிருந்த கார் சேதமடைந்ததாக, தியாகராய நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் தீபா. இந்த விவகாரத்தில், தனது அமைப்பைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. முதலில் தீபாவின் வீட்டில் விசாரணை நடத்திய காவல் துறை, அதன்பிறகு அருகிலுள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது.

விசாரணையின் முடிவில், தீபாவின் அலுவலகத்தில் கல்வீச்சு சம்பவமே நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தனர் காவல் துறையினர். இதைத் தொடர்ந்து, தீபாவின் கட்சி அலுவலகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மணிமாறன், விஜயகுமார், ஞானபிரகாசம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால், தீபா அலுவலகம் மீதான தாக்குதல் ஒரு நாடகம் என்பது அம்பலமாகியிருக்கிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017