மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

புத்தாண்டு: பாதுகாப்புப் பணியில் 15,000 போலீஸார்!

புத்தாண்டு: பாதுகாப்புப் பணியில் 15,000 போலீஸார்!

பெங்களூரில் டிசம்பர் 31 அன்று இரவு புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட நகரம் முழுவதும் 15,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதுகுறித்து பெங்களூரு போலீஸ் ஆணையர் டி.சுனில் குமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “2018ஆம் ஆண்டை அமைதியான முறையில் வரவேற்க 500 பெண் போலீஸார் உள்பட 15,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், நகரம் முழுவதும் 800 சிசிடிவி கேமராக்கள், 750 ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரவு 9 மணிக்கு மேல் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது குறித்து சோதனை நடைபெறும். புத்தாண்டை முன்னிட்டு பார் மற்றும் ஹோட்டல்கள் 2 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நகரத்தின் மத்திய வணிக மாவட்டத்தில் உணவகங்கள், விடுதிகள் மற்றும் ஷாப்பிங் ஆகியவற்றுக்கும் பிரபலமான பிரிகேட் மற்றும் எம்.ஜி. சாலைகளிலும் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நகர மையத்தில் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருக்கும் 500 சிசிடிவி கேமராக்களுடன் கூடுதலாக 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கமிஷனர் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்படும்.

கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அதுபோன்ற சம்பவங்கள் இந்தாண்டில் நிகழாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொந்தரவு செய்யும் மற்றும் தீய காரியங்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017