மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

சென்னையில் கால்நடைகள் காட்சி!

சென்னையில் கால்நடைகள் காட்சி!

சென்னை பெருங்குடியில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வருகிற ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நாட்டுக் கால்நடைகள் காட்சி நடைபெறவுள்ளது.

நாட்டுக் கால்நடைகளைப் பாதுகாக்கவும், அதன் அவசியத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்தக் காட்சி நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கால்நடைகளின் முக்கியத்துவம் மற்றும் பன்முகத்தன்மையை உயர்த்துவதற்காக விவசாயிகள், ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தக் காட்சி நடைபெறுகிறது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ராஜ மார்த்தாண்டன் கூறினார்.

இந்தக் காட்சியில் ஏழு வகையைச் சேர்ந்த பசுக்கள், காளைகள் மற்றும் ஒன்பது வகையைச் சேர்ந்த செம்மறியாடு மற்றும் ஆடு மற்றும் கோழி வகைகள் இடம்பெறுகின்றன. 30 வகைக்கும் மேற்பட்ட கால்நடைகளும், 100க்கும் மேற்பட்ட குதிரைகள், எருமைகள், நாய்கள், சேவல்கள் இடம்பெறுகின்றன.

கால்நடை காட்சி மட்டுமல்லாமல், உணவு திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விதவிதமான ருசியான சமையல் மற்றும் தானியங்களைப் பயன்படுத்தி எவ்வாறு உணவு சமைக்க வேண்டும் என்பது குறித்து சமையல்காரர்கள் விளக்கம் அளிப்பார்கள்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017