மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் - பட்டாணி கட்லெட்!

கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் - பட்டாணி கட்லெட்!

தேவையானவை:

ஊறவைத்த பட்டாணி - 1 கப்

துருவிய பீட்ரூட் - அரை கப்

உருளைக்கிழங்கு - 3

பெரிய வெங்காயம் - 2

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்

மிளகாய்பொடி - 1 டீஸ்பூன்

மைதா - கால் கப்

பிரெட் க்ரெம்ஸ் - கால் கப்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கு, பீட்ரூட், பட்டாணியை நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும். பிறகு வேகவைத்து மசித்த பீட்ரூட் - பட்டாணி - உருளைக்கிழங்கில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கரம் மசாலா, மிளகாய் பொடி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். மைதா மாவில் ஒரு சிட்டிகை உப்பு, கரம் மசாலா சேர்த்து அரை டம்ளர் தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் கையினால் தட்டி, அதைக் கரைத்துவைத்துள்ள மைதாவில் முக்கி, பிரெட் தூளில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். எண்ணெய் மிதமான தீயில் இருக்கட்டும். இல்லையென்றால் கட்லெட் வெளிப்புறம் சிவந்து இருந்தாலும் உள்ளே சரியான பதத்தில் இருக்காது. தக்காளி சாஸுடன் சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும்.

கீர்த்தனா சிந்தனைகள் :

இழந்தது எதுவாயினும்

அதை விட சிறந்தது

கிடைக்கும் என்பது

நம்பிக்கை...!

கிடைத்தது

எதுவாயினும்

அதுவே சிறந்தது

என

எண்ணுவது

தன்னம்பிக்கை..!

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017