மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

முதியோருக்கு உதவித் தொகையை வழங்க வேண்டும்!

முதியோருக்கு உதவித் தொகையை வழங்க வேண்டும்!

ஆதரவற்றோர், விதவைகள், முதியோருக்கு வழங்கப்பட்டுவரும் உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர், விதவைகள், முதியோருக்கு வழங்கும் உதவித் தொகை திட்டம் முக்கிய இடம் பெறுகிறது. ஜெயலலிதா முதியோர் ஓய்வூதியத் திட்டத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தார். ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு இந்தத் திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படாததால் தமிழ்நாடு முழுக்க முதியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். விதவைகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை கூட முறையாகக் கிடைக்கவில்லை. பிள்ளைகள் ஆதரவு இல்லாமல் தனியாக வசிக்கும் லட்சக்கணக்கான ஆண், பெண் முதியோருக்கு மாதா மாதம் வழங்கப்பட்ட உதவித் தொகை கடந்த சில மாதங்களாகக் கிடைக்கவில்லை. இதனால் வயதான காலத்தில் உதவித் தொகை கேட்டு தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகிறார்கள்.

குறிப்பாக ஆர்கே நகர் தொகுதியில் நேற்று முதியோர் தங்களுக்கு பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருக்கும் உதவித் தொகையைக் கேட்டு சாலை மறியலும் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தியிருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை பெறுவதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. அவர்களுக்கு ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை உதவித் தொகை நிலுவையில் இருக்கிறது. அஞ்சல்துறை மூலமாக வழங்கப்பட்டு வந்தவரை இந்தப் பிரச்னை இல்லை. ஜெயலலிதாதான் இந்தத் திட்டத்தின் முறைகேடுகளை தடுக்க வங்கி மூலம் வழங்க உத்தரவிட்டார். ஆனால், வங்கி மூலம் வழங்கத் தொடங்கியதில் இருந்தே பயனாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாரத்துக்கு ஒருநாள் விநியோகம், ஒரு நாளைக்கு இத்தனை பேர்தான் வர வேண்டும், மாதாமாதம் புதுப்பிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளால் பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தேக்கம் ஏற்படுகிறது. நிதி பற்றாக்குறையும் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே, இதுகுறித்து தமிழக அரசு செவிசாய்த்து தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், விதவைகள், முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017