மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 டிச 2017

மாற்றுத் திறனாளிகளுக்குப் புதிய ‘மொபைல் ஆப்’!

மாற்றுத் திறனாளிகளுக்குப் புதிய ‘மொபைல் ஆப்’!

தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக அனைத்துச் சேவைகளையும் ஒருங்கிணைத்துப் புதிய ‘மொபைல் ஆப்’பை உருவாக்கி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த உள்ளது.

“முதன்முறையாகத் தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளின் சிரமங்களைக் குறைக்கவும், நலத்திட்டங்கள் விரைவாக அவர்களைச் சென்றடைவதற்காகப் புதிய மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். தேசியத் தகவல் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த மொபைல் ஆப்பை உருவாக்கினார்கள்.

இந்த மொபைல் ஆப் வருகிற புத்தாண்டு 2018இல் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். மாற்றுத்திறனாளிகள் தாங்கள் இருக்கிற இடத்தில் இருந்தே அடையாள அட்டைப் பெறவும், நலத்திட்ட உதவிகளுக்கும் மற்றும் உதவித் தொகை பெறவும் இந்த மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் உதவித்தொகை வரவு வைக்கப்பட்ட விவரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும், இந்த ஆப் மூலம் பெற முடியும். மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டைப் பெற, விண்ணப்பத்துடன் மருத்துவச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ஆய்வு செய்த பின், குறிப்பிட்ட நாளில் வரவழைத்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதும், உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும். முன்னோடித் திட்டமான, இதை மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 29 டிச 2017